நாராயணசாமி அப்போது அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டின் காவலாளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு..
"ஹலோ எப்படிப்பா இருக்கே... வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?"
"நான் நல்லா இருக்கேன் எசமான்.. வீட்லதான் ஒரு சின்ன பிரச்சினை"
"என்னப்பா பிரச்னை..?"
"நீங்க ஆசையா வளர்த்துவந்த கிளி செத்துபோயிடுச்சுங்க எசமான்.."
"என்னது..? கிளி செத்துடிச்சா..? அது ரொம்ப புத்திசாலிக் கிளியாச்சேப்பா..? எப்படி செத்துச்சு..?"
"கெட்டுப் போன இறைச்சியை சாப்பிட்டதுனால செத்துடுச்சு எசமான்"
"கெட்டுப்போன இறைச்சியா..? அதுக்கு எங்கேருந்துப்பா கிடைச்சது..?"
"செத்துப்போன குதிரையோட இறைச்சி எசமான்..!"
"செத்துப்போன குதிரையா..? அது என்ன கூத்து..? யாரோட குதிரை அது..?"
"நீங்க ரேஸ்ல ஓட்ட ஆசையா வாங்கிட்டு வந்தீங்களே அந்த குதிரைதான் எசமான்.."
"அய்யோ.. குதிரை எப்படிய்யா செத்துச்சு..?"
"தண்ணி வண்டியை இழுத்துட்டு வரும்போது கால் தவறி கீழே விழுந்து செத்துப்போச்சுங்க எசமான்.."
"அட மடையா.. அதை ஏண்டா தண்ணி வண்டியில பூட்டினே..?"
"உங்க வீட்டுல பிடிச்ச தீயை அப்புறம் எப்படி அணைக்கிறது எசமான்..?"
"என்னது.? என் மாளிகை தீப்பிடிச்சுடுச்சா..? எப்படிடா சனியனே..?"
"அகல் விளக்கு கீழே விழுந்து திரைச்சீலை பத்திகிச்சு எசமான்."
"கடவுளே.. அகல்விளக்கை ஏன் கொளுத்தினீங்க*..?"
"இறுதிச்சடங்குக்காக சார்.."
"இறுதி சடங்கா..? யாருக்கு..?"
"உங்க வீட்டுக்காரம்மாவுக்குதான் எசமான்.."
"என் வீட்டுக்காரியா..? அவ எப்படிடா செத்தாள்..?"
"தலையிலே கல்லு பட்டுடுச்சுங்க எசமான்.."
"தலையில கல்லு பட்டுதா..? எப்படிடா..?"
"ஒருநாள் தூக்கம் வராம மாடியில உலாத்தினாங்க.. நான் திருடன்னு நெனச்சி அடிச்சு சாய்ச்சிட்டேன் தெய்வமே.."
சிறிது நேர அமைதிக்குப் பின் நாராயணசாமி சொன்னார்,
"சரி...சரி... போனதெல்லாம் போகட்டும்.. அந்தக் கல்லாவது இருக்குல்ல..? அதுதான் என் குலதெய்வம்.. பத்திரமா எடுத்து வை.. அந்தக் கல்லுக்கு மட்டும் எதுவும் ஆச்சுன்னு சொன்னே... நீ காலி..!"

No comments:
Post a Comment