தேனின் மருத்துவ குணங்கள் அதிகம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறதா?
அதற்கும் தேன் ஒரு மருந்தாக உள்ளது. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருகக் கொடுங்கள். நல்ல பலன் தெரியும்.
சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வாகு சீராகும்
No comments:
Post a Comment