பாண்டிச்சேரியில் பிரபல சர்க்கஸ் குழு ஒன்று முகாமிட்டிருந்தது.
கூடாரங்களை நிர்மாணிக்கும் வேலைக்கு உள்ளூர் ஆட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உள்ளூர் ஆட்களில் நம்ம நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் இருந்தனர். தரையில் பெரும் முளைகளை அடித்து, அவற்றில் கூடாரக் கயிறுகளை இழுத்துக்கட்டும் பொறுப்பு நாராயணசாம மற்றும் மண்ணுசாமி இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
சர்க்கஸ் முதலாளி வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று மேற்பார்வையிட்டு சுற்றிவந்தார்.
ஒரு இடத்தில், நாராயணசாமி மட்டும் வேலை செய்யாமல், சர்க்கஸ் வீரர்களைப் போல பல்டி அடிப்பதும், ஒற்றைக்காலில் நின்றபடி பேலன்ஸ் செய்து உடலை வளைப்பதுமாக செய்துகொண்டிருந்தார்.
இதைக் கவனித்த சர்க்கஸ் கம்பெனி முதலாளி நாராயணசாமியை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பினார்.
எனவே அவரது நண்பனான மண்ணுசாமியிடம் விசாரித்தார்..
"உன் நண்பனா அவன்..? அவனிடம் உள்ள திறமைக்கு எங்கள் கம்பெனியில் சேர்ந்தால் ஒரு காட்சிக்கு 200 ரூபாய் தருவேன். ஒருநாளில் 3 காட்சிகள் கூட நடக்கும். கொஞ்சம் கேட்டுச் சொல்கிறாயா..?"
"ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.."
என்ற மண்ணுசாமி நாராயணசாமியை பார்த்துக் கேட்டார்,
“எலே நாராயணசாமி.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நச்சுக்கிக்கிறியாலே..?!!!!

No comments:
Post a Comment