Friday, 28 October 2016

சொர்க்கத்திற்கு வந்து சேர்ந்த நாராயணசாமி, அங்கிருந்த‌ சூழ்நிலையைப் பார்த்துவிட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
அடிக்கொரு தடவை,
"எத்தனை அமைதி, எவ்வளவு நிம்மதி!"என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.
திரும்பத் திரும்ப அதைக்கேட்டு புளித்துப் போனதால் சொர்க்கத்தின் தலைவன் அவனை நரகத்திற்கு அனுப்பி வைத்தான்.
அங்கும் நாராயணசாமி,
"எத்தனை அமைதி,எவ்வளவு நிம்மதி!''என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.
சொர்க்கத்தின் தலைவனும் நரகத்தின் தலைவனும் ஒன்றும் புரியாமல்,
"என்னடாஇது அதிசயம்! சொர்க்கமும் நிம்மதி,நரகமும் நிம்மதி என்கிறாயே,ஒன்றுமே புரியவில்லை"என்றனர்.
நாராயணசாமி சொன்னார்,
"பூலோகத்தில் என் மனைவியுடன் 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள்!"

No comments:

Post a Comment