Sunday, 9 October 2016

நாராயணசாமியும், கடைசி பந்தும்

இது 15 வது ஐபில் சீசனில் நடக்கப்போவது.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும், மும்பை இண்டியன்ஸ்க்கும் இடையேயான போட்டி.

அது இருபதாவது ஓவரின் கடைசி பந்து. பத்து ரன்கள் எடுத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்ற நிலமை.

ஒரு பத்து.... பத்து ரன். எப்படி அது சாத்தியம்?

மலிங்காவின் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாரானார் சென்னையின் துணை கேப்டன் நாராயணசாமி.

மும்பை எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையிலும், நாராயணசாமியை ரன் எடுக்காமல் செய்து விட வேண்டும் என்ற வெறியிலும், தன்னால் முடிந்த அளவு பலத்தை உபயோகித்து பந்து வீசினான் மலிங்கா.

நாராயணசாமியை கண்டு அணுகுண்டு கூட ஆட்டம் காணும் போது மலிங்கா எம்மாத்திரம்?

தன் உடல் பலம் முழுவதையும் கைகளில் செலுத்தி, மட்டையை சுழற்றியடிக்க....

யாரும் எதிர்பார்க்காதபடி....

மட்டையில் பட்ட பந்து இரண்டாக உடைந்து....

ஒரு பாதி நான்கு ரன்னுக்காக‌ கோட்டைத் தாண்டியும், ஒரு பாதி 6 ரன்னுக்காக‌ ஸ்டேடியத்தை தாண்டியும் போய் விழுந்தது.

எந்த ரன்னை எடுத்துக் கொள்வது? நான்கா? ஆறா?

அவசர அவசரமாக கூடியது ஐபில் உயர்மட்டக் குழு.

அதன் முடிவில்.....

"நாராயணசாமி கடையி பந்தில் 10 ரன்கள் எடுத்ததாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதாகவும்" அறிவிக்கப்பட்டது!!!

No comments:

Post a Comment