அப்பல்லோவுக்கு கனிமொழியை அனுப்புவதாக தான் கருணாநிதி திட்டம் வைத்திருந்தாராம்... ஜெயலலிதாவும் பெண் என்பதால் ஒரு பெண்ணை இன்னொரு பெண் போய் பார்தால் தான் லாஜிக் படி சரியாக இருக்கும் என்கிற நிலைப்பாடு அவருக்கு எப்போதுமே உண்டு.. ( குறிப்பாக.. நாடார் வீட்டு திருமணம்னா அவருடைய நாடார் மனைவியை அனுப்புவது.. தேவர் வீட்டு திருமனம்னா ஸ்டாலினுடன் கட்சியில் உள்ள தேவர் சமூகத்தை சார்ந்த பிரபலங்களை அனுப்புவது வழக்கம், அந்த மாதிரி)
ஆனால்... கனிமொழியை முன்னிலை படுத்தும் கருணாநிதியின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் சம்மதிக்காமல் தான்.. தானே புறப்பாட்டு சென்றாறாம்.! இத்தனைக்கும் ஜெயலலிதா யாரையும் பார்க்கும் நிலையிலும் இல்லை, நான் போய் பார்ப்பதாக திட்டமும் இல்லை என முந்தா நாள் தஞ்சையில் கூரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!
கலைஞர் திட்டப்படி கனிமொழி சென்றிருந்தால் சமூக வலைத்தளத்தில் இந்த அளவுக்கு விமர்சனங்கள் எழுந்திருக்காது என்பதே எதர்த்தம். ஏன் என்றால் தீட்டம் தீட்டுவதில் கருணாநிதி வல்லவர், பல விடயங்களை மனதில் வைத்து லாபநட்ட கணக்குகளை சரியாக பார்த்தே அவரின் திட்டங்கள் இருக்கும் அந்த வகையில் ஜெயலலிதா விடையத்தில் அவரின் சாய்ஸ் கனிமொழி.!
எழவு வீடாக இருந்தால் தான் தான் பினமாக இருக்கனும், கல்யாண வீடாக இருந்தால் தான் தான் மணமகனாக இருக்கனும் என்று கலைஞரை போலவே ஸ்டாலினும் நினைத்து சென்றதால் இன்று இணையம் முழுக்க இவ்விடயத்தில் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம் எழுந்திருக்கிறது...
ஜெயலலிதா யாரையும் பார்க்கும் நிலையில் இல்லை என்று ஸ்டாலினே சொன்னதாக இருக்கட்டும், ஜெயலலிதாவை அப்பல்லோவுக்கு பார்க்க சென்ற மற்ற கட்சியின் தலைவர்களை திமுகவினர் கீழ் தரமாக விமர்ச்சித்தது போன்ற விடயங்களே, இன்று இனையம் முழுக்க ஸ்டாலின் காரிதுப்ப படுவதற்கு காரனமாயிற்று.!!!
நேற்று இரவு வரை மற்ற கட்சியின் தலைவர்களை காரி துப்பிக் கொண்டிருந்த திமுக அல்லக்கைகள்.. இன்றைக்கு அதே விடயத்துக்காக ஸ்டாலினுக்கு தண்ணீர் தெளித்து புனிதர் பட்டம் வழங்கி கொண்டிருக்கிறார்கள் எனபது தான் மிகப்பெரிய வேடிக்கை.!!!

No comments:
Post a Comment