Wednesday, 5 October 2016

ஆட்சியாளர்களுக்கு ஒரு கோரிக்கை!

தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்று (41%) ஆட்சி செய்து கொண்டிருப்பவர் ஜெயலலிதா அவர்கள்.
தற்போது, ஜெயலலிதா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரை சந்தித்து உண்மை நிலையை அறிந்து கொள்ள அரசு அதிகாரிகள் மட்டுமின்றி ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் கவர்னருக்குக் கூட முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி வழ‌ங்கப்படவில்லை என ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாம் தளம் முழுவதும் சசிகலா கூட்டத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தெரிகிறது. (சசிகலா கூட்டம் ஜெயலலிதாவால் "துரோகிகள்" என்று கூறி போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட கதை எல்லோரும் அறிந்ததுதான்)
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தைப் பயன்படுத்தி சில துரோகக் கூட்டம் மோசடி வேலைகளில் ஈடுபட இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே, மாண்புமிகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களும், தமிழக ஆளுனர் (பொறுப்பு) வித்யாசாகர் அவர்களும் இந்த மாதிரியான மோசடி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிக்க‌ கவனம் செலுத்த வேண்டும் என்றும், முதல்வரின் கையெழுத்துடன் வரும் கோப்புகளை, கையெழுத்தை உறுதிப் படுத்திய பின்னரே அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க‌ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவேளை இப்படியான மோசடிகள் எதுவும் நடைபெற்றால், இத்தகைய மோசடிக்கு அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் பிரதாப் ரெட்டியும் துணை போனதாகக் கருதி அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட‌ வேண்டும்.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.
எனவே, இந்திய மற்றும் தமிழக உளவுப் பிரிவுகள் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் எதுவும் நடந்துவிடாத வண்ணம் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ஆம். சட்டத்தின் ஆட்சி நடக்கட்டும்!!

No comments:

Post a Comment