Saturday, 29 October 2016

பாகிஸ்தான்காரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் அருகருகே அமர்ந்து ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.
பாகிஸ்தானி கோக் குடிக்க ஆசைப்பட்டார். இந்தியரும் உடனே எழுந்து போய் கோக் ஒன்று வாங்கப் போனார். அந்த சமயம் பாகிஸ்தானி இந்தியர் கழட்டி வைத்திருந்த சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.
பின் இந்தியர் கோக் கொண்டு வந்து குடித்ததும் நன்றி சொல்லிவிட்டு இன்னொரு கோக் குடிக்க விரும்புவதாகச் சொன்னார். இந்தியரும் தயங்காது உடனே சென்று அடுத்த கோக்கை வாங்கி வரச்செல்ல, பாகிஸ்தானியும் இன்னொரு சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.
இந்தியர் வந்ததும் அவர் கொடுத்த கோக்கை ரசித்துக் குடித்தார். இறங்கும் இடம் நெருங்கியது.இந்தியர் தன சூவை எடுத்துகாலில் அணிந்தார்.
அப்போதுதான் அவர் அதில் எச்சல் துப்பப்பட்டிருப்பதை உணர்ந்தார். உடனே,அவர் பாகிஸ்தானியிடம் கேட்டார்,
''ஏன் நண்பா,இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இந்த விளையாட்டை விளையாடப் போகிறோம்? நான் எழுந்து சென்றதும் என் சூவில் நீங்கள் எச்சல் துப்புவதும் உங்களுக்கு கோக் வாங்கித் தருகிறேன் என்று கூறிச் சென்று அதில் சிறிது சிறு நீரை நான் கலந்து தருவதும் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்.?''

No comments:

Post a Comment