Sunday, 9 October 2016

நாராயணசாமியும், இடிச்ச புளியும்

நாராயணசாமிக்கு திருமணமான புதிது. மனைவியோடு ஒரு விழாவுக்குச் சென்றிருந்தார்.

இவர் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், மனைவி அவரது நண்பி ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது

"ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்
உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல உன் கணவர் யாருன்னு காட்டேன்"

"அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

"ஆமாம்"

"கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

"ஆமாம்"

"நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

"ஆமாம்"

"தலையில் சுருள் முடியோட..."

"ஆமாம்"

"கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

"ஆமாம்"

"ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

"ஆமாம்"

"நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

"ஆமாண்டி ... கொடுத்து வச்சவ நீ "

"அதெல்லாம் ஒண்ணுமில்லைடி ... அவருக்கு வலப்பக்கம் இடிச்சபுளி மாதிரி ஒருத்தர் உட்கார்ந்திருக்கார் பாரு.... அவர்தான் என் கணவர்!!!"

No comments:

Post a Comment