நேற்று மதியம் 3 மணிக்கு அப்பல்லோவுக்கு சென்றேன்.
மீடியாக்களில் கிளப்பி விடப்படுவது போல் போலீஸ் கெடுபிடி, தொந்தரவெல்லாம் இல்லை. வழக்கமான 2 செக்யூரிடிகள் மட்டுமே இருந்தார்கள்.
அவர்களிடமும், பிஆர்ஓவை சந்திக்கவேண்டும் என்றவுடன் மூன்றாவது தளத்துக்கு வழி காட்டினார்கள். கீழிருந்து நேராக இரண்டாவது தளத்துக்குப் போனால்தானே யாரும் கேள்வி கேட்பார்கள் என்று யோசித்து லிப்டில் ஏறி மூன்றாவது தளத்துக்குப் போய் அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்கு வந்தேன்.
வழக்கம்போலவே மருத்துவர்கள், நர்ஸ்கள், நோயாளிகளின் உறவினர்கள் என சகஜமாகவே இருந்தது.
ஒரு ஒல்லியான வார்டு பாயை ஓரம்கட்டி நைசாக, "அம்மா இருக்கிற ரூம் எதுப்பா" என்றேன்.
"உங்க அம்மாவா சார்?" என்றான்.
"தமிழ்நாட்டுக்கே அம்மாடா, நம்ம சிஎம் எங்கடா?" என்றேன்.
"லூசா சார் நீ, அது மெட்ராஸ் அப்பல்லோ சார். இது மதுரை அப்பல்லோ, போ... இந்த வராண்டா கடைசிலதான் மூளைக்கு பார்க்கிற டாக்டர் இருக்கார்"
No comments:
Post a Comment