Sunday, 30 October 2016

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
"குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு குரு அவனிடம்,
"நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.
அவன்,
"என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது" என்று கூறினான்.
"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,உன் கால்களை கொடு" என்றார்.
அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.
"உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு" என்றார்.
அதற்கு அந்த ஏழை,
"என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது" என்று கூறினான்.
அதைக் கேட்ட அந்த குரு அவனிடம் கூறினார்,
"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை. மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு"

ஆனால் இப்போது.............???

காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,
"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.
உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.
அதற்கு காமராசர்,
"நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்.
பக்கத்து வீட்ல புருஷன் பொண்டாட்டிக்குள்ள எவ்ளோ பெரிய சண்டை நடக்குது ... நீங்க ஒரு தடவை போயி பாக்க கூடாதா ?

Husband :
அட போடி ... நான் போயி பாத்ததால வந்த சண்டை தான் அது!
கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.
"பெருந்தகையீர், என் மகனுக்குத் தாங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"500 வெள்ளிக்காசுகள் தாந்துவிடுங்கள்" என்றார் பிளாட்டோ.
"என்ன... 500 வெள்ளிக் காசுகளா...?“ என்று அதிர்ந்து போய்க் கேட்டார் செல்வந்தர்.
"ஆமாம்“ என்றார் பிளாட்டோ.
"இது மிக மிக அதிகம். அதை விடக் குறைந்த பணத்தில் நான் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடுவேன்" என்றார் செல்வந்தர்.
அதைக் கேட்டுப் புன்னகைத்த பிளாட்டோ சொன்னார்,
"நீங்கள் சொல்வது சரிதான். இதைவிடக் குறைந்த பணத்திற்கு நீங்கள் ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பிறகு பாருங்கள், உங்கள் வீட்டில் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் இருப்பார்கள்"

Saturday, 29 October 2016

ஞாயிற்றுக்கிழமை,
ரோட்ல சும்மா நடந்து போயிகிட்டு இருந்தேன்.
திடீர் ஜனங்க எல்லாம் ஓடுனாங்க ... எல்லோர் முகத்திலும் மரண பீதி.
என்னன்னு பார்த்தா பெரிய ராஜ நாகம். சுமார் 7 அடி இருக்கும்.
எல்லோரும்கிட்ட போக பயந்தாங்க.
நான் கிட்ட போனேன்.
செருப்பை கழட்டி ஓரமா போட்டுட்டு வெறும் காலாலே மிதி மிதி ன்னு மிதிச்சேன்.
எல்லோரும் என்னை ஆச்சரியமா பார்த்தாங்க.
#நீங்களே சொல்லுங்க ... செத்த பாம்பை எதுக்கு செருப்பு போட்டுட்டு மிதிக்கணும்???
*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
*மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
*பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
*பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
*தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.
*அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
*தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.
குடிகாரன் "சசி " அண்ணாச்சியை,
பாதிரியார் நீரில் 3 தவணை முக்கி எடுத்து சொன்னார்,
"மகனே "சசி" இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்கப்படுவாய். நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும். இனி மேல் மதுஅருந்த மாட்டேன்" என்று .
"சசி " என்ற அந்தோனி மறுமொழியாக,
"சாமி, சாயா குடிக்கலாமா?" என்று கேட்க,
பாதிரியாரும்,
"ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை" என்றார்.
விட்டிற்கு வந்த "சசி" அண்ணாச்சி,
"ரம்" பாட்டிலை பக்கெட்டில் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து,
"ரம்மே,ரம்மே ... இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்"
என்று சொல்லி தனது வேலையே தொடர்ந்தார்.