பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.
அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.
அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.
இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.
வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழம், தமிழகத்தில் செய்யப்படும் தாளிக்கும் முறையால் என்ன பயன் என்று ஆராய்ச்சி நடத்தியது.
அதாவது, வாணலியில் எண்ணெய் ஊற்றி றிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிப்பதால் பிரிரேடிக்கல்ஸ் எனும் ஒரு வகை நோய் உருவாவதையும் இந்த தாளிப்பு முறை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் நமது உயிரணுக்கள் பாதிக்கிறது. உயிரணுக்களில் உள்ள புரோட்டின் அழிகிறது.
அதன் விளைவு புற்று நோய், வாதநோய் போன்றவை ஏற்படுகிறது.
No comments:
Post a Comment