மரணப் படுக்கையில் இருந்த நாராயணசாமி, தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
"லதா, நான் இறந்தவுடன் நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு"
"அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி"
"சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு"
"ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?"
"சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு"
"உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்"
கடும் கோபத்துடன் சொன்னார் நாராயணசாமி,
"இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்? நீயா இல்லை நானா?"
No comments:
Post a Comment