Friday, 7 October 2016

"ஆட்சியாளர்களுக்கு ஒரு கோரிக்கை" என்ற தலைப்பில் நான் நேற்று முகநூலில் பதிவு செய்திருந்ததை அனைவரும் அறிவீர்கள்.
இன்று, சசிகலா புஷ்பா எம்பி அவர்கள் அதே தகவலை மையப்படுத்தி மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக விரிவான‌ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்கள்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விசயம் ....
"முதல்வர் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள். முதல்வர் உடல்நிலை பற்றி மக்களுக்கு வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். முதலமைச்சரின் உடல் நலமின்மையை பயன்படுத்தி சிலர் தவறான காரியங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு துரோகக் கும்பல் எதுவும் மோசடி வேலைகளில் ஈடுபட்டுவிடாமல் தடுத்திட வேண்டும்"

No comments:

Post a Comment