Friday, 7 October 2016

காமராஜரின் மேடைப்பேச்சு!

"ஏழைகள் மானம் மாியாைதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கலங்கள் விரும்பவில்லை. ஏழைகள் என்றும் அடிமைகளாகவேதான் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.
இவர்கள் நம்மைச் சாதிச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள், என் ஜாதிக் காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்கிறார்கள். யார் மந்திரியாக இருப்பது என்பது பிரச்சினையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை.
நான் கூடப் பல‌ ஆண்டுகளாகப் பெரிய‌ மந்திாியாக இருந்தேன். நான் மந்திாியாக இருந்தேன் என்பதற்காக நாடார்கெளல்லாம் "நாடார் மந்திாியாக இருக்கிறார்; நாங்கள் எல்லாம் உைழக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம்" எனச் சொல்வது நியாயமா என்ன?
நான் மந்திாியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும், காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பலியாகிவிடக் கூடாது.
நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன். ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிேறன்? யார் தயவும் எனக்குத் தேவயில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்றே விரும்புகிறேன்.. இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.
நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களைச் சந்திக்க தவற மாட்டேன். வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்ப்டாதவன் நான்"
- நவசக்தி 13.7.68

No comments:

Post a Comment