Monday, 10 October 2016

பாவத்தின் சம்பளம்???

அக்டோபர் மாதம் என்றாலே பொய்யைத் தவிர வேறொன்றும் அறியாத வாய்ச்சொல் வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான்.
இப்படித்தான், உடல் நலமின்றி நீண்ட நாள் பாதிக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அதிகாலையில் இறந்த‌ போது, பெருந்தலைவர் காமராஜர்தான் விசம் வைத்துக் கொன்றுவிட்டார் என்று ஓட்டுப் பிச்சைக்காக வசைபாடித் திரிந்தன சில வல்லூறுகள்.
ஏன் இவ்வளவு வன்மம் இவர்களுக்கு??? ...
பெருந்தலைவருக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் என்னதான் பிரச்சினை???
காமராஜர் குறித்த முத்துராமலிங்கத் தேவரின் மேடைப் பேச்சில் ஒன்று மட்டும் இங்கே...
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டம் பற்றி முத்துராமலிங்கத் தேவர் இப்படித்தான் பேசினார், "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."
ஆனால், அரசியல் அறிந்தவர்களுக்கு உண்மை தெரியும். ஒருபோதும் பெருந்தலைவர் காமராஜர் முத்துராமலிங்க தேவரை குறைவாக மதிப்பிட்டு பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது முத்துராமலிங்கத் தேவர் சார்ந்த கட்சி மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அந்த மூன்று தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் இருந்தது. காங்கிரசின் பரம‌ எதிரியான திமுக படுதோல்வியடைந்து இடம் தெரியாமல் இருந்தது. எனவே, காமராஜரின் ஆதரவும் முத்துராமலிங்கத் தேவருக்கே இருந்தது.
இன்னும் சொல்லப்போனால், தனது தீவிர விசுவாசிகளான வேலுச்சாமி நாடார், இம்மானுவேல் சேகரன் ஆகியோருக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இடையே பகைமை உருவான போது யார் பக்கமும் சாயாமல் நடுநிலையையே கடைபிடித்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
இறைவன் மிகப் பெரியவன்.
மாசற்ற தங்கமாய், ஏழைகளின் ஏந்தலாய் தன் வாழ் நாளையே இந்து சமூகத்திற்காக அர்பணித்த தலைவர், "வைரவா, விளக்கை அணைத்துவிட்டுப் போ" என்றவாறு தன் உயிரையும் துறந்தார். புண்ணிய ஆத்மா.
ஆனால், அவரை மேடை தோறும் வசைபாடித் திரிந்தவர்களின் கடைசிக் காலம் எப்படி இருந்தது??
சாணான் மதுரை முத்து, இசை வேளாளர் எஸ்.எஸ்.தென்னரசு போன்றோர் இதற்கு உதாரணங்கள்.
மேலும், காமராஜரை வசைபாடியவர்கள், அவரது புகழைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள என அனைவரது இறுதி வாழ்க்கையும் அணு அணுவாய் துடித்து சாகும்படிதான் இருந்தது என்பதை நீங்களே ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.
ஆம். அது இன்றுவரை தொடர்கிறது!!!

No comments:

Post a Comment