Thursday, 27 October 2016

நம்ம நாராயணசாமியும், குஜராத்தியும்,சர்தார்ஜியும் ஒரு அலுவலகத்தில் சம பதவிகளில் வேலை செய்து வந்தனர்.
ஒரு நாள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,
குஜராத்தி சொன்னார்,
"என் மனைவி தினமும் எனக்கு பிரியாணிதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் பிரியாணி கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"
சர்தார்ஜி சொன்னார்,
"என் மனைவி தினமும் எனக்கு சப்பாத்திதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் சப்பாத்தி கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"
நாராயணசாமி சொன்னார்,
"என் மனைவி தினமும் எனக்கு உப்புமாதான் கொடுத்தனுப்புகிறார்.. நாளை மட்டும் அவள் உப்புமா கொடுத்தனுப்பினால், நமது அலுவலகத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்"
மறு நாளும் வந்தது.. உணவு வேளையும் வந்தது... உணவில் எந்தவித மாற்றமும் இல்லை... உடனே மூவரும் அலுவலகத்தில் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
மூவரது மனைவியர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்த பிறகுதான், மூவரும் தற்கொலை செய்ததற்கான‌ காரணத்தை அறிந்தனர்.
"இப்படித் தெரிந்திருந்தால் பிரியாணி கொடுத்திருக்க மாட்டேனே" குஜராத்தியின் மனைவியும்,
"இப்படித் தெரிந்திருந்தால் சப்பாத்தி கொடுத்திருக்க மாட்டேனே" சர்தார்ஜியின் மனைவியும்,
நாராயணசாமி மனைவியின் அழுகையை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. நீண்ட நேர சமாதானப்படுத்ததலுக்குப் பின் சொன்னார்,
"அய்யோ... இன்னைக்கு உப்புமா செஞ்சது மட்டுமில்லாம,அவரேதான டிபன் பாக்சிலயும் வச்சாரு!"

No comments:

Post a Comment