Sunday, 9 October 2016

நாராயணசாமியும், கிளியும்

கூடங்குளத்துல ஒரு நிறுவனத்துல வேலை பார்த்துகிட்டிடுந்தார் நம்ம நாராயணாசாமி.

ஒரு நாள் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தார்.

அங்கே பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளி நாராயணசாமியைப் பார்த்து,

“ஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்."

நாராயணசாமிக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டார்.

அவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தார்.

அப்போதும் அந்த கிளி சொன்னது, "ஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்"

அவருக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவர் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டார்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி,

“ஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்" என்றது.

இப்போது நாராயணசாமி கடைக்காரரிடம் சென்று முறையிட்டார். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் நாராயணசாமியிடம் "கிளி மறுபடியும் அப்படி சொல்லாது" என வாக்குறுதியும் தந்தார்.

மாலையில் நாராயணசாமி வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,

"ஏய்ய்ய்....."

"என்ன??" என்றார் நாராயணசாமி

அதற்கு கிளி சொன்னது,

"உனக்கே தெரியும்... நான் வேற சொல்லணுமா?"

No comments:

Post a Comment