Saturday, 29 October 2016

ஒரு முறை,
அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்றைப் பற்றிய உத்தரவை வெளியிடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொன்னார் காமராஜர்.
அதற்கு அந்த அதிகாரி,
"அதற்கு ஜி.ஓ இடம் தராது" என்றார்.
"ஜி.ஓ. என்றால் என்ன?" திருப்பிக் கேட்டார் காமராஜர்.
"கவர்மெண்ட் ஆர்டர் ஐயா" என்றார் புன்னகைத்தபடி அந்த அதிகாரி (தான் படித்தவன் என்ற கர்வத்துடன்)
"அப்படியா ... கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?" திரும்பவும் காமராஜர் கேட்க,
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தார் அந்த அதிகாரி.
அவரது நிலையை புரிந்து கொண்ட காமராஜர் சொன்னார்,
"அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்து போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர் தானே! ... நான் சொன்னபடி எழுதி வாருங்கள் ... நான் கையெழுத்து போடுகிறேன்"

No comments:

Post a Comment