Friday, 14 October 2016

சசிகலா நடராஜன் "பதவி ஆசை இல்லாதவர்" என்று சிலர் இங்கே பதிவிட்டு வருகின்றனர்.
அது உண்மையல்ல.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பாகவே, ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்று விட்டால் ஆட்சியையும், கட்சியையும் எப்படி கைப்பற்றுவது என ஒன்று கூடி ஆலோசித்தவர்கள்தான் சசிகலா குடும்பத்தினர். இதனை அறிந்து கொண்ட ஜெயலலிதா "துரோகிகள்" என்று கூறி ஒட்டு மொத்த சசிகலா குடும்பத்தையும் போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடித்தார்.
அதன்பின், நான் அக்காவுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. துரோகம் இழைத்ததெல்லாம் என் கணவரும், குடும்பத்தாரும் தான். எனவே, இனி எனக்கு கணவன் வேண்டாம். சகோதரன் வேண்டாம். சகோதரி வேண்டாம். அக்காவின் (ஜெயலலிதா) அன்பு மட்டுமே போதும் என்றதோடு, "கட்சியில் எந்த பதவியும் வகிக்க மாட்டேன், அரசியலில் ஈடுபட்டு ஒரு பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட ஆக மாட்டேன்" என்று ஜெயலலிதாவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் சசிகலா.
அதன் பின் தான் போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பதே உண்மை.

No comments:

Post a Comment