போன ஞாயிற்றுக்கிழமை.
வீட்ல சும்மாதானே இருக்குறோம் ஏதாவது வேலை பண்ணுவோம்னு நினைச்சி, ஒட்டடை அடிக்க ஆரம்பிச்சேன்.
ஏணி மீது ஏறி நின்ற ஒட்டடை அடிப்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சி (என்னைக்காவது வேலை செஞ்சாதானே?)
அப்போ,
நான் படும் அவஸ்தையைக் கண்டு,அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த என் மகனிடம் என் மனைவி சொன்னாள்,
"டேய் மகனே, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒட்டடை அடிக்கிறார் பார்த்தாயா? ... நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு ஒத்தாசை பண்ணனும் ... சரியா?"
என் மகன் ரொம்ப தெளிவானவன்.
உடனே என் மனைவியப் பார்த்துக் கேட்டான்,
"அப்போ ... நான் பெரியவன் ஆகிறவரைக்கும் இவர் ஒட்டடை அடிச்சி முடிக்க மாட்டாரா?"
#நமக்கு எதிரி வெளியில் இல்லை!
No comments:
Post a Comment