Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் பாலியல் கல்வியும்

நாராயணசாமி என்னும் சிறுவன் அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

நாட்டு நடப்பில் வெறுத்துப் போயிருந்த அவனது தந்தை, அவனுக்கு பாலியல் கல்வியினை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வந்ததும் நாராயணசாமியை கூப்பிட்டு,

"அதாவது மகனே... நான் இப்ப பேச போறது கொஞ்சம் பெரிய விஷயம், இந்த விஷயத்தைப் பத்தி உன்கிட்ட பேசறதுல எனக்கு மொதல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சி ... ஆனா வேற வழி இல்ல நான் பேசித்தான் ஆகணும்" தயங்கி தயங்கி பேசினார் தந்தை.

"அப்படி என்னது அது.. இவ்ளோ தயங்கி தயங்கி பேசறிங்க.."

"ம்ம்ம்ம் ... அதாவது நாம இப்ப பாலியல் பத்தி தெளிவா பேச போறோம்"

"ஒஹோ ... அப்படியா.. OK.. சொல்லுங்க உங்களுக்கு அதுல, எந்த மாதிரி சந்தேகம் ... தயங்காம கேளுங்க"

No comments:

Post a Comment