Tuesday, 11 October 2016

அந்த சமையற்காரியின் சமையல் பிடிக்காமல் அவளை வேலையை விட்டு நீக்கினாள் எஜமானி.
“மேடம், நீங்க பண்றது கொஞ்சமும் நல்லா இல்லை. நான் சமைக்கிறதும், பரிமாரறதும் உங்களை விட நல்லா இருக்குன்னு அய்யா பல தடவை சொல்லியிருக்காரு”
இதைக்கேட்ட எஜமானிக்கு டாப் டு பாட்டம் எரிந்தது. அடக்கிக் கொண்டு,
“சில விஷயங்கள் அய்யாக்களை விட அம்மாக்களுக்குதான் நல்லா தெரியும். நீ போகலாம்”
“இன்னொரு விஷயம்…”
“என்ன அது?”
“ஒரு ஆம்பிளைக்கு படுக்கைலே என்ன தேவைன்னு உங்களை விட எனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்காம்”
இப்போது எஜமானியின் கோபம் எல்லை மீறியது.
“இதையும் அய்யாதான் சொன்னாரா?”
“இல்லைங்க, இதைச் சொன்னது தோட்டக்காரன்”

No comments:

Post a Comment