Monday, 21 August 2017

தமிழனின் ஆதிதெய்வம் முருகனே! 10,000 ஆண்டுகள் பழமையான கோவிலின் ரகசியம்!

பரிபாடல், குறுந்தொகை நூல்களில் ஆதி தமிழர்கள் மழையை தெய்வமாக கருதினர் என்றும், மழையின் தெய்வம் இந்திரன்யென்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக குமரிகாண்டம் இருந்த போதே நாம் கடவுளாக முருகப்பெருமானை வணங்கியதும் 10,000 ஆண்டிற்கு முன் முருகனுக்காக நம் முன்னோர்கள் கோயில் கட்டியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் முதலில் வாழ்ந்த குமரிகண்டம் முதல் பல்வேறு கண்டங்களில் மழைக்காக இந்திரனை வழிப்படுவதுடன் அதற்கு இந்திரன் விழா ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் முருகன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் கி.மு 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.

கல்லால் ஆன வேல் இந்த கோயிலில் அமைக்கப்பட்டதன் சாட்சியாகவே இது முருகன் கோயில் என்கிறார்கள்.

தற்போது கோயில்கள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி கட்டப்படுகிறது, ஆனால் இந்த கோயில் சற்றே மாறாக வடக்கு நோக்கி கட்டியுள்ளனர்.

இந்தக் கோயில் சுடு செங்கர்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே அறிவியல் முன்னோடிகளாக திகழ்ந்திருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்!




கீரர் பிரியன் என்பவர் இந்த கோயிலுக்கு 10 பொன் நன்கொடை தந்திருப்பதாகவும், முதலாம் ராஜராஜ சோழன் அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தகவல்களும், குறவை கூத்துப்பற்றியும் இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக்கபட்டது.

பச்சைக் கல்லினால் ஆன சிவலிங்கம் ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த கோயில் அழிவுற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த கோயில் பழமையான கோயில் என்று அகழ்வாய்வாளர்களால் நம்பப்படுகிறது.

Sunday, 30 October 2016

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.
அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.
தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.
ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான்.
அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை.
படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான்.
எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று,
“வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”!!!

சிகரெட் புகை இதயத்தின் பகை :

மணிக்கு 3.5 மைல் வேகத்தில் நடக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 5.2 கலோரி சக்தி வெளியாகிறது. 20 நிமிடம் நடந்தால் 101 கலோரி சக்தி வெளியாகும்.
அதுபோலவே, ஒரு நிமிடத்திற்கு சைக்கிள் ஓட்டினால் 8.2 கலோரி சக்தியும், நீந்தும்போது நிமிடத்திற்கு 11.2 கலோரியும், ஓடினால் ஒரு நிமிடத்திற்கு 19.4 கலோரியும் வெளியாகிறது.
நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் போன்றவற்றை மேற்கொள்ளும்போது எவ்வளவு நேரம் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்குக் கலோரி சக்தி வெளியாகிறது; அதன் அடிப்படையிலேயே உணவின் அளவிற்கும், உடற்பயிற்சிக்கும் தொடர்பு இருப்பதை அறியமுடியும்.
எந்த உடற்பயிற்சியையும் அல்லது உடலுழைப்பையும் மேற்கொள்ளவில்லையெனில், குறிப்பிட்ட அளவு கலோரி உணவு சக்தி உடலில் தேக்கப்படுகிறது; பருமனாவதற்கும் வழி வகுக்கிறது.
ஆகவே உடற்பயிற்சியை - உடலுழைப்பை மேற்கொள்ள முடியாதவர்கள் கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல மாவு, புரதம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைப் பலவழிகளிலும் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கலோரி சக்திகளற்ற அல்லது மிகவும் குறைந்த அளவிலான கலோரி சக்தியுடைய உணவுப் பொருட்களைக் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நீரிழிவு நோயுடையோர், இனிப்பை விரும்பினால், கலோரி சக்தி நிறைந்த சர்க்கரை அல்லது வெல்லத்திற்கு மாற்றாகக் கலோரி சக்தியற்ற சாக்கரினைவிட ஏற்புடையதாகக் கருதப்படும், ஆஸ்பார்டேம் (Aspartame)’ அல்லது லெவுலோஸ் (Levulose)’ எனப்படும், இனிப்பு மாத்திரைகளையோ மாத்திரைத் துகளினையோ உணவுடனோ பானங்களுடனோ சேர்த்துக் கொள்ளலாம்.
ஆஸ்பார்டேம், லெவுலோஸ் ஆகியவையும் வேதியல் பொருட்களை உள்ளடக்கி இருப்பதால் அவற்றையும் பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது குறைந்த அளவிற்கே பயன்படுத்திடலாம் என்பதையும் சீர்தூக்கிப் பார்த்திடல் வேண்டும்.
உடல் எடையைக் குறைத்திடுவதற்காகச் சில தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும், இதழ்களிலும், துண்டுத் தாள்கள் போன்றவற்றிலும் செய்யப்படும் பகட்டான விளம்பரங்களைப் பெரிதும் நம்பி ஏமாந்து போவதோடு, இருக்கும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்! எச்சரிக்கை.
புகையே மாரடைப்பிற்கான முழுக் காரணமாகி விடுவதுண்டு

நுரையீரல் புற்று நோய்க்கு எவரும் இலக்காகலாம் என்கிற நிலை இருந்தாலும், அதிக அளவில் புகைபிடிப்பவர்களே, பெரும் அளவில் நுரையீரல் புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.
புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமாகும்.
நுரையீரல் புற்றுநோயைக் காட்டிலும் மாரடைப்பினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு அதிகமாக இருக்கின்றது என்பதால், புகை பிடிப்பதையொட்டி மாரடைப்பினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே உயர்ந்துவிடும்.
தனிப்பட்ட முறையில் புகை மட்டுமே பெருமளவில் மாரடைப்பினை ஏற்படுத்தி விடாது என்கிற நிலையில் இருந்தாலும், பிற தூண்டுதல் காரணங்களிருப்பின், புகையே மாரடைப்பிற்கு மேலும் தூண்டுதலாகிவிடும். சில நேரங்களில் புகை மட்டுமே மாரடைப்பை உண்டாக்கி விடுவதுண்டு.
சிகரெட் புகையில் பல்வேறு வாயுக்கள் இருப்பினும், நிகோடின் (nicotin),, ஹைட்ரஜன் சயனைடு (hydrogen cyanide), கார்பன் மோனாக்சைடு (carbonmonoxide), பென்ஸ்பைரின் (benzpyrine), பினால் (phenol) ஆகியவை குறிப்பிடத்தக்க நச்சுப் பொருட்களாகும்.
கார்பன் மோனாக்சைடானது, இரத்தத்தில் கலந்திடும்போது, இரத்த சிவப்பு அணுக்களிலுள்ள உயிர்வளியை அகற்றி அந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறது. அதன் காரணமாகத் திசுக்களுக்கும், இதயத் தசைகளுக்கும் தேவையான உயிர்வளி கிடைக்காத நிலையில் பாதிப்பிற்குள்ளாகின்றன.
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட், போன்ற தீமையைத் தரும் கொழுப்புப் பொருட்களை, இரத்தத்தில் பெருக்குவதோடு, கொழுப்புத் திவலைகளை இரத்தநாள உட்சுவர்களிலும் தொடர்ச்சியாகப் படியச்செய்வதற்கும், புகையிலுள்ள கார்பன் மோனாக்சைடு தூண்டுதலாக இருக்கின்றது.
சிகரெட் புகையிலுள்ள நிகோடின் எனும் நச்சானது, அட்ரினல் சுரப்பியைத் தூண்டி, எபிநெப்ரின் (epinephrin) எனும் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது.
எபிநெப்ரின் கல்லீரலிலிருந்து சர்க்கரையை வெளிப்படுத்தி உடனடிச் சோர்வைப் போக்குகிறது என்றாலும், இறுதியில் நரம்பைச் சோர்வடையச் செய்கிறது. எபிநெப்ரின், இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது; சில நேரங்களில் இதயத் துடிப்பைத் தாறுமாறாக்குகிறது; இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.
சிகரெட் புகை, இதயத்தசைகளுக்கான இரத்த நாளத்தைச் சுருங்கச்செய்து தடை ஏற்படுத்துகிறது.
இரத்த தட்டை அணுக்கள் (platelets) ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதற்கும், அதன் காரணமாக இரத்தம் உள்ளூர உறைதலுக்கும் தூண்டுதலாக அமைகின்றது.
ஆகவே, சிகரெட் புகை, மாரடைப்பு ஏற்படுவதற்குப் பலவழிகளிலும் தூண்டுதலாக அமைகிறது.
பில்டர் சிகரெட், பைப்மூலம் புகை பிடித்தல் போன்றவற்றால் புகையின் நச்சுத் தன்மையும், வீரியமும் முழு அளவில் வடிகட்டப்படும் என்பது இயலாத ஒன்றாகும் என்பனவற்றை நினைவில் கொண்டு புகைக்காமலிருக்க முயற்சி செய்து வெற்றி பெறவேண்டும்.

புகை பிடிப்பதைத் தவிர்ப்பதால்,
மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைதல்.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் குறைதல்.
நுரையீரல் பாதிப்புகள் குறைதல்.
இருமல் கட்டுக்குள் வருதல்.
நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைதல்.
இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு நீங்குதல்.
உணவின் சுவையினை அறிதல்.
பணம் விரயமாவதைத் தடுத்தல்.
உடற்பயிற்சியை - உடலுழைப்பை மேற்கொள்ள போதிய உடல் நலம் பெறுதல்.
வெறுக்கத்தக்க நாற்றத்தைப் போக்கி நாற்றமற்ற மூச்சு (சுவாசம்) நிலைநாட்டல், வெண்மையடையும் பற்கள்;
வயிற்றுக் குடல் புண் நீங்குதல்.
போன்ற நன்மைகளை எண்ணிப்பாருங்கள்.
புகை பிடிப்பவர்கள் பெரும்பாலோர், ஏதோ புத்துணர்வு கிடைப்பதாகவே நினைத்துக் கொண்டு புகை பிடிக்கத் தொடங்குகின்றனர். மற்றவர்களைக் கவர்வதாக நினைத்துக் கொண்டும் இளைஞர்கள் புகைக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒருவரின் குணநலன்களைக் கொண்டுதான், மற்றவர்கள் அவரை விரும்புகிறார்களே அல்லாமல், அவர் சிகரெட் பிடிப்பதாலல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
புகை பிடிப்பவர்கள் பல்வேறு நிலைகளில் இருக்கக் கூடும்.
மன உறுதியோடு கடைப்பிடித்தால், புகை பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
தொடர்ச்சியாக இடைவிடாமல் புகை பிடித்தவர்கள்கூட, பல்லாயிரக்கணக்கானவர்கள், புகைப்பழக்கத்தை விட்டொழித்துள்ளார்கள்.
ஆகவே, புகைக்கு அடிமையாகிவிட்டோம் - விடவே முடிவதில்லை, என்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும்.
ஆரம்பத்தில் சிரமமாகத் தோன்றினாலும், விடா முயற்சியாலும் மன உறுதியாலும் புகை பிடித்தலை உறுதியாக நிறுத்திவிட முடியும்.
புகையை நிறுத்த முற்படும் ஆரம்பக் கட்டத்தில், விரும்பிப் பிடிக்கும் சிகரெட்டுகளைத் தவிர்த்து விருப்பமில்லாத சிகரெட்டுகளாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், நாளில் குறிப்பிட்ட வேளைகளில், குறிப்பாக, அடுத்தடுத்த ஒரு மணி நேர இடைப்பட்ட, கால கட்டங்களில் சிகரெட்டைத் தொடுவதில்லை என்கிற உறுதியோடு கடைப்பிடிக்க வேண்டும், நாளடைவில், இடைப்பட்ட காலத்தைக் கூட்டிக்கொண்டே வரும்போது நாளொன்றிற்கு ஒன்று, இரண்டு சிகரெட் அளவிற்குக் கொண்டுவந்து இறுதியில் முழுமையாக நிறுத்திவிடலாம்.
சிகரெட்டுக்கு மாற்றாக, நெல்லிக்காய் வற்றல், சவ்வு மிட்டாய் (chewing gum), தண்ணீர் குடித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
சிகரெட் பிடிக்கும் அன்பர்களோடு பழகுவதைச் சில நாட்களுக்கு விட்டொதுக்கலாம்.
புகைபிடிக்கக்கூடாது என்று அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவுரை வழங்குங்கள்; அறிவுரை வழங்கும் தகுதியை நீங்களே முழுமையாகப் பெற்றுவிடுவீர்கள்.
சிகரெட் என்று நினைத்த உடனேயே புகை பிடிக்க முயற்சி செய்யக்கூடாது; காலங்கடத்திட வேண்டும்; மாற்றாகத் தண்ணீர் பருகவேண்டும்.
சிகரெட் பிடித்தலைத் தன் இச்சைக்கு உட்பட்ட செயலாகவே இருந்திடுமாறு கவனம் தேவை.
சிகரெட்டை முழுமையாகப் புகைக்காமல் பாதியிலேயே முழுமையாக அணைத்துக் குப்பையோடு சேர்த்திடல் வேண்டும்.
எப்பொழுதும் பழக்கப்பட்ட விரல்களல்லாமல் மாற்று விரல்கள் கொண்டு புகைபிடித்து, இச்சைக்குள் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிகரெட் பிடிக்கப் போகுமுன், உண்மையிலேயே இப்பொழுது புகை தேவைப்படுகிறதா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் செயலானது, தன்னுடைய சிதைக்குத் தானே எரியூட்டிக் கொள்வதாகும், என்பது மிகையாகாது.
நன்றி : மருத்துவர் வெ.குழந்தவேலு
போன ஞாயிற்றுக்கிழமை.
வீட்ல சும்மாதானே இருக்குறோம் ஏதாவது வேலை பண்ணுவோம்னு நினைச்சி, ஒட்டடை அடிக்க ஆரம்பிச்சேன்.
ஏணி மீது ஏறி நின்ற ஒட்டடை அடிப்பதற்கு ரொம்ப கஷ்டமாக‌ இருந்துச்சி (என்னைக்காவது வேலை செஞ்சாதானே?)
அப்போ,
நான் படும் அவஸ்தையைக் கண்டு,அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த என் மகனிடம் என் மனைவி சொன்னாள்,
"டேய் மகனே, அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒட்டடை அடிக்கிறார் பார்த்தாயா? ... நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு ஒத்தாசை பண்ணனும் ... சரியா?"
என் மகன் ரொம்ப தெளிவானவன்.
உடனே என் மனைவியப் பார்த்துக் கேட்டான்,
"அப்போ ... நான் பெரியவன் ஆகிறவரைக்கும் இவர் ஒட்டடை அடிச்சி முடிக்க மாட்டாரா?"
#நமக்கு எதிரி வெளியில் இல்லை!

அரிசிக் கஞ்சியின் மகத்துவம்

சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.
பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.
இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு‌ம்பு பலம் பெறும்
நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக்
வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,
அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட
பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு...
அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு நெனச்சாரு,
"என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே" அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..
நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்
"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.
அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம
வேகத்த கொறச்சிகிட்டாறு...
ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்...
ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு
ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..
பார்த்தா நம்ம யமஹா பைக்வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..
அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து சொன்னான்,
"நான் தான் "முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா அப்படின்னு கேட்டானே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே"
ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது.
அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது.
ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.
உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..
"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."
"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"
" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."
" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"
" மன்னிக்கவும் அய்யா.. இது...."
"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"
" தெரியாது அய்யா.."
" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"